தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள Glocal Fair 2023 கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தலைமையில் இன்று(15) ஆரம்பமானது. இதன் போது தேசிய கீதம் தமிழில் மொழில் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,இந்திய தூதுவர் கோபால் பாகலே, புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் Sarah Lou Arriola தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்