மேலும் சில சட்டங்களில் திருத்தம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படவுள்ளன. தேசிய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்த தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படவுள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய இந்த சட்ட திருத்தங்கள்  தொடர்பாக தெரிவிக்கையில் தேசிய கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்றம் அங்;கீகாரம் வழங்கியுள்ள நிலையில், மத்திய வங்கியின் அடுத்தத் தீர்மானங்கள் குறித்து, எதிர்வரும் சில தினங்களில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

ஓய்வூதிய நிதிக்கு வழங்கப்படும் ஒன்பது சதவீத வட்டியை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.  தேவைப்படுமாயின், வட்டிக்கான நிதியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதாகவும், அந்த நிதியை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன