இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததும் மாணவர்களுக்கு தொழில்பயிற்சி கற்கை நெறி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கின்தொட்ட சாஹிரா வித்தியாலத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய கல்வி அமைச்சர்
நாடளாவிய ரீதியில் இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமான மாணவர்கள் இந்த தொழில்பயிற்சியினை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளனர் என்றார்.