மலையக மக்களின் இருநூற்றாண்டு நினைவு கூறல்

இலங்கையின் தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திப் பொருட்களுக்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும்  அதிலே  தொழில்புரியும் பெருந் தோட்ட மக்களுடைய  மேம்பாட்டுக்காக   இந்தியா இலங்கையுடன் நேச நாடாக இருந்து கொண்டு  பாரிய பங்களிப்பை நல்கி வருவதாக கண்டியிலுள்ள இந்திய துணை தூதரகத்தின்  இரண்டாம் நிலைச் செயலாளர் கவுன்சிலர் பி. சோமராஜ் தெரிவித்துள்ளார்.

கண்டி கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் மலையக மக்களின் இருநூறாவது  நூற்றாண்டு வதிவை நினைவு கூறல் நிகழ்வு தேவலாயத்தின் மண்டபத்தில் சபை குருவான அருட்பணியாளர் செல்டன் சமாதானம் தலைமையில் இடம்பெற்றது  நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில். இந்தியா இலங்கையுடன் நேச நாடாக இருந்து கொண்டு  இந்தப்பணிக்காக பாரிய பங்களிப்பை நல்கி வருவதுடன் இலங்கை இந்தியா நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தி வருகின்றோம் என்றும்  குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.  பரமேஸ்வரன், குருநாகலை  முன்னாள் அத்தியட்சானம்  பிரதான குரு முதல்வர் அருட்பணியாளர்  குமார லியனகே ஜோன் பாஸ்கரன் நிர்வாக குழு உறுப்பினர் ஜோன்ஸ் பாஸ்கரன், சபை வதிவிட குரு அருட்பணியாளர் தியாகராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகலை அத்தியட்சானம்  பிரதான குரு முதல்வர் அருட்பணியாளர் நிசாந்த பெர்ணான்டோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்வாரலாற்று நிகழ்வை நினைவு கூறும் இவ்வாண்டில்  ‘மலைய மக்களின் மாண்பை சிறப்பிக்க எம்மை அர்ப்பணிப்போம். மலையக மக்களின் நலன்களுக்கான கூட்டுச் செயற்பாட்டை ஊக்குவிப்போம். வறுமைக்கு பசிக்கும் எதிராக போராடும் அவசியத்தை உணர்த்துவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பங்காற்றிய வரும் பணியாளர்கள் கௌரவிக்க்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது வருமானம் குறைந்த மலையகப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன