மரங்களை வெட்டி அகற்ற ஆளுநர் உத்தரவு

பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மரங்களையும் கிளைகளையும் வெட்டி அகற்ற உடன் நடவடிக்if எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரை பணித்துள்ளார். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் மரக்கிளை விழந்ததினால் மரணித்த சம்பவங்கள் பதிவானதை அடுத்து ஆளுநர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்படும் மரங்களை வெட்டி அகற்ற சட்டவிதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் படி உள்ளூராட்சி அமைப்புக்களை அறிவுறுத்துவதுடன் பொதுமக்களையும் இது விடயமாக விழிப்படையச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.