மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்  ,இன்று (5) மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு  தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  மூலம் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2431 மீனவர்களுக்கு தலா  75 லீற்றர்  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

மன்னார் நகர மீனவர்களுக்கு மன்னாரில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்  ஏ.கலிஸ்ரன்  தலைமையில் இடம்பெற்ற இதுதொடர்பான நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மீனவர் ஒருவருக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் மானியமாக  வழங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக மன்னார் நகர மீனவர்களுக்கு 75 லீற்றர்  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன