மன்னாரில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா

இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னாரில் நடைபெறவுள்ளது.

தேசிய நிகழ்வு அடுத்த மாதம் 28ஆம் திகதி மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட சிலாவத்துறை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான நடவக்கைகளை முஸ்லிம் சமய கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

மீலாதுன் நபி விழாவைசிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று (26) காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் ஒழுங்கமைப்பில் புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

39 வது தேசிய மீலாதுன் நபி விழா முதல் முறையாக மன்னார் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ளார்.இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன