மன்னாரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்குகொண்டுவரப்பட வேண்டும்

மன்னாரில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நொச்சிக்குளத்தில் கடந்த வருடம் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராம மக்களிடையே அமைதி இன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மக்கள் நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.மன்னாரில் உள்ள “ரவுடி: கும்பல் ஒன்று குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதனால் ஒரு கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்வும் அவர் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (10)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயங்களை கூறினார்.
மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, இளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும் பட்சத்திலேயே இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற மாத்திரைகள் போலியானதாக உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்..

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன