ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 53ஆவது ஆரம்ப கூட்டத்தொடரின் போது கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் Volker Turk, பொறுப்புக் கூறல் தொடர்பில் பேரவையினால் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை கவலை தருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து கடந்த தசாப்தகாலமாக நிலவிவரும் உறவுகளை முன்னெடுத்துவருகின்றனர். கடந்த காலங்களில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டின் அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் பேரவையின உயர்ஸ்தானிகர் Volker Turk தெரிவித்தார். கடந்த 19ம் திகதி ஆரம்பமான பேரவையின் அமர்வு, ஜூலை 14ம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது