மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போர் நிறுத்தம்  –  இஸ்ரேல் இணக்கம்

மனிதாபிமான உதவிகளுக்காக ஒருசில பகுதிகளில் 4 மணி நேரம் போரை நிறுத்த  இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்களை பினைக் கைதிகளாக சிறைபிடித்துச்சென்றனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்போம் என்ற உறுதியுடன்  இஸ்ரேல்  போரிட்டு வருகிறது. காசாவில் போர் தீவிரம் அடைந்துள்ளது. இந் நிலையில்,  4 ஆயிரம் குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காசா பகுதியில் நாள்தோறும் 4 மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. கூடுதல் நேரம் சண்டை நிறுத்தம் தேவை என்று தாம் வலியுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முழுமையான போர் நிறுத்தம் இருக்காது என்று கூறியுள்ள இஸ்ரேலிய ராணுவம், மனிதாபிமான உதவிகளுக்காக மட்டும் சிறு சிறு பகுதிகளில் போர் நிறுத்தம் சில மணி நேரம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகவும், பினைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன