மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுவள்ளதாக ,மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) காலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் இடம் பெற்றபோது மன்னார் மறைமாவட்ட ஆயர் இதுதொடர்பான விடயங்களை குறிப்பிட்டார்.
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி (15-08-2023) நடைபெறவுள்ளது
இம்முறை ஆவணி மாத திருவிழாவிற்கு சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. .மடு திருத்தலத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் திருப்பணிகளுக்கு வீடு வழங்க முடியாத நிலை உள்ளது.
எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரம் அமைத்து மடு திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர் வரும் ஆவணி மாதம் 6ஆம் திகதி(6-08-2023) கொடியேற்றத்துடன் திருவிழா ஆயத்த நவ நாட்களை ஆரம்பிக்கின்றோம் என்றார்.
ஆவணி 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.