‘மங்கி பொக்ஸ்’ குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்

‘மங்கி பொக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை தொற்று நோய் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதில் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேலும் இருவருக்கு இந்த  தொற்று ஏற்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து  இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள மங்கிபொக்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

‘மங்கி பொக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதால், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று பதில் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமிதா கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன