ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
காலி மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டுக்கு தற்சமயம் தேர்தல் அவசியமில்லை, அடுத்த வருடம் தேர்தலுக்கான ஆண்டாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.