பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு  வகுப்புக்கு தடை

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு  பகிடிவதை  சம்பவம் தொடர்பில் வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய மாணவர்கள் மீதான பகிடிவதை சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வகுப்புத்தடை தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , சமார் 21 சிரேஷ்ட மாணவர்கள்   பாதிக்கப்பட்டுள்ள புதிய மாணவர்களுக்கு கெட்டுப்போன உணவைக் கொடுத்துள்ளனர். அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர் என்றும் உப வேந்தர் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன