புள்ளிவிபரங்களைப் பெற்று, பெருந்தோட்ட சமூகம் இன்று எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

முறைப்படி புள்ளிவிபரங்களைப் பெற்று, பெருந்தோட்ட சமூகம் இன்று எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்  

இன்று கௌரவ மனோ கணேசன் அவர்கள் முன்மொழிந்து, கௌரவ இராதா கிருஷ்ணன் அவர்கள் வழிமொழிந்த மலையக மற்றும் தாழ்நில பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முறை, உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் விவாதத்துக்கு உட்படுத்தப்படும் இந்தத் தருணத்தில் பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை நான் முன்வைக்கிறேன்.

முதலாவதாகஇ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரிடம், பெருந்தோட்டச் சமூகத்தின் துல்லியமான சனத்தொகை கணக்கெடுப்பு உள்ளதா என்று கேட்க விரும்புகின்றேன். இந்நாட்டில் பெருந்தோட்ட சமூகம் மட்டுமன்றி பல்வேறு மக்கள் பிரிவினரைப் பற்றியும் முறையான சனத்தொகை கணக்கெடுப்பு அல்லது புள்ளி விபரங்கள் இல்லை. இவை இல்லாது அவர்களைக் கட்டியெழுப்ப பேசுகிரீர்கள். ‘அஸ்வெசும’ திட்டமும் கூட இதுபோன்ற புள்ளி விவரங்கள் இல்லாததால்தான் தோல்வி கண்டது.

புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில்இ பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான பெருந்தோட்ட சமூகம் கிட்டத்தட்ட 4 லட்சம் மற்றும் பொருளாதார ரீதியாக செயலற்ற பெருந்தோட்ட சமூகம் கிட்டத்தட்ட 3 லட்சம் என்று அண்ணளவாக உள்ளனர். ஆனால், முறைப்படி புள்ளிவிபரங்களைப் பெற்று, பெருந்தோட்ட சமூகம் இன்று எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தொழிலாளர் பங்கேற்பைப் பார்க்கும்போது, பெண்களின் உழைப்புப் பங்கேற்பு தேசிய அளவில் உயர் மட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்றும் கூறினார்.

சுகாதாரத் துறையில்இ மருத்துவமனை முறைமையில் நோய் நிவாரண இலவச மருத்துவ வசதி கிடைப்பதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளன. மேலும்இ தோட்டப் பகுதிகளில் சுகாதார வசதிகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், 1958 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க சட்டத்தின் பின்னரே தோட்ட சமூகப் பாடசாலைகள் அரசாங்கக் கல்வி முறையில் இணைந்தன. அதுவரை பெருந்தோட்ட சமூகம் ஓரங்கட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, தோட்ட சமூகத்தில் 12 வீதமானவர்கள் மட்டுமே பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். மற்றவர்கள் 10ம் வகுப்பு வரை மட்டுமே கற்றுள்ளனர். புள்ளிவிவரங்களைக் கணக்கிடும்போது, தோட்டங்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறமாக பிரிக்கப்படுகின்றன. அவர்களில் 82 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் கல்வியறிவில்லாதவர்களாகக் காணப்படுகின்றவர்கள் தோட்டத்துறை சார்ந்தவர்களாவர். அதற்காக நாம் வெட்கப்படவும், கவலையடையவும் வேண்டும்.

UNICEF மற்றும் UNESCO ஆகியவை கல்வித் துறையில் கொவிட் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. இதன்படி, பெருந்தோட்ட சமூகத்தின் ஒரு குடும்பத்தின் வருமானம் 23 வீதத்தால் குறைந்துள்ளது. இதனால் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பெருந்தோட்டத்துறைப் பிள்ளைகள் கணினி கல்வியறிவின் அடிப்படையில் குறைந்த மட்டத்தில் உள்ளனர்.

அதே போன்று எல்லை நிர்ணய சிக்கல்கள் உள்ளன. பெருந்தோட்ட சமூகம் வாழும் மாவட்டங்களில் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் குறைவாகவே காணப்படுகின்றன. இவை அதிகரிக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் இந்தப் பிரச்சினை உள்ளது.

தொழிலாளர் சட்டத்தின் சில அம்சங்கள் அவர்களுக்குப் பொருந்தாது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம். தமிழ் மொழியறிவு உள்ள அரசு உத்தியோகத்தர்களும் குறைவு. எனவே, முறையான மொழிக் கொள்கையும் சட்டக் கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

1994ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பல வருடங்களாக இதை கண்டுகொள்ளாதது ஏன்? புதிய சட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை? இப்போது ஏதேதோ சொல்கிறார்கள் .2019ஆம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்து. தோட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சொன்னார்கள்  இப்போது சம்பளம் ரூ. 1000 வாக ஆக்கினோம் என்கிறார்கள்.

உட்கட்டமைப்பின் கீழ் வீடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த தோட்டத்துறை வீட்டுப் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதற்கு இந்த நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும். 58 வீதமான தோட்ட மக்கள் நுவரெலியாவிலும்; 18 வீதமானவர்கள் ஊவா மாகாணத்திலும் உள்ளனர். அவர்களில் 150,000 பேர் பதுளை மாவட்டத்தில் உள்ளனர். இந்த மக்களின் வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட சமூகம் வாழும் பிரதேசங்களில் பயிரிடப்படாத காணிகளை பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்மொழிந்தோம். இது மூலதன வலுப்படுத்தலாகும். லயன் அறைகளில் தொடர்ந்து வேலையாட்களாக இருந்த வரும் இவர்களுக்கு விவசாய காணிகளை வழங்க நாம் தயங்கக் கூடாது. கட்டாயமாக எமது அரசாங்கத்தில் அவர்களுக்கு வீடும்  பயிர்ச் செய்கைக் காணியும் வழங்கப்பட்டு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவார்கள். தோட்டத் துறையின் ‘தொழிலாளி’ என்பவர்களையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வோம்.  இதை இப்போது கூறும் போது சிலர் சிரிக்கின்றார்கள். இது பற்றி பேசும் போது 2019 ஜனாதிபதி தேர்தலிலும் இனவாதம் மற்றும் மதவெறியையும் கிளப்பினர். இப்போதும் அப்படித்தான். சில சேனல்கள் இனவாதத்தையும் மதவெறியையும் கிளப்புகின்றன. இவர்களை சிறு தேயிலை உரிமையாளர்களாக மாற்றுவது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் சிறந்தது.

2019 புள்ளிவிவரங்களின்படி, தோட்ட சமூகத்தில் 33.8 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். வறுமையை போக்க காணிகளில் பயிர் செய்யும் உரிமையை அவர்களுக்கு வழங்கினால், அவர்களும் தங்கள் சொந்த பலத்தால் வறுமையில் இருந்து மீள முடியும்.

அவ்வாறே குடியுரிமை வழங்குவதில் பல்வேறு சட்டங்கள் இருப்பதை நாம் அறிவோம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தோட்டச் சமூகத்திற்கு அனைத்து சட்ட விதிகளின் ஊடாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. ஒருபுறம், தொழிலாளர் உரிமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும், மேலும் குடியுரிமை குறைபாடுகள் காணப்படுகின்ற இடங்களை நிவர்த்தி செய்து புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மலையாள தமிழ் சமூகத்தின் வரலாற்று போராட்டத்தையும் பங்களிப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தனி அடையாளத்துடன் கூடிய தரப்பு என விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன்இ தேர்தல் முறைமைகளை உருவாக்கும் போதுஇ அவர்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். இந்தக்  குறைபாடுகளை கண்டறிய தேசிய ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட வேண்டும். அப்போது தோட்ட சமூகத்தின் உரிமையை ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன