இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 ஒக்டோபர் 24ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023 ஒக்டோபர் 24ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சிலஇடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.