பிரேசில் இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் நன்கொடை

பிரேசில் கூட்டுறவு முகவரமைப்பின் ஊடாக பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு இலங்கைக்கு 10,000 வழக்கமான மனித இன்சுலின் குப்பிகள் மற்றும் 08 மில்லியன் பொலிப்ரொப்பிலீன் டிப்கள் உட்பட மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் 2023 மே 17ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனஸிடம் இருந்து இந்த மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்.

இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், பிரேசில் அரசாங்கத்தின் இந்த நல்லெண்ணச் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வாட் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த நன்கொடையை ஒருங்கிணைத்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 17

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன