2023 ஆசிய கிரிக்கெட் கிண்ண போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட பாரிய தோல்வியையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை வழிநடத்துவதற்கான தலைமைப்பொறுப்பு துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ்சுக்கு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
இருப்பினும் , இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் இன்னும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியக் கிண்ணத்தை இழந்ததற்காக தசுன் ஷானக்கவை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் Chris Silverwood தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக தெரிவான சிறந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.