பாடசாலைகளையும் புறக்கணிக்குமாறு கோரிக்கை: தகவல் வழங்க மறுத்த வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சிகளால் நேற்று (20.10.2023) வடக்கு கிழக்கு மாகாணங்களில் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றையதினம் தமிழ்க் கட்சிகளால் விடுக்கப்பட்ட அறிக்கையில், பாடசாலைகளையும் புறக்கணிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் பாடசாலைகள் நேற்று வழமைபோல் இயங்கிதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் வரவு தொடர்பில் இலங்கை ஒலிபரப்புக் நிலையம் ஒன்றின்  யாழ்ப்பாண மாவட்ட செய்தியாளர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் அவர்களை தொலைபேசி ஊடாக  தொடர்புகொண்டு   கேட்டபோது அது தொடர்பான விடயங்களை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அந்த நிலையத்தின் யாழ்ப்பாண மாவட்ட செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்

நேற்றைய தினம்  வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணவர்களின் வரவு சம்பந்தமாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் அவர்களை நண்பகல் 12.00 மணிக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு குறித்த விபரங்களைத் தருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் “விபரங்களை எடுத்துப்போட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார். மீண்டும் நான் நண்பகல் 01.00 மணிக்கு தொலைபேசி அழைப்பை பணிப்பாளருக்கு எடுத்தேன். “வாறேன் தருகிறேன்” என்று சொன்னார்.

மீண்டும் 02.00 மணிக்கு தொலைபேசி அழைப்பை அவருக்கு ஏற்படுத்தினேன். அப்போது கூறினார் திட்டமிடல் கிளைக்கு விபரங்களை அனுப்பியுள்ளேன் அவர்கள் உங்களுக்கு தரவில்லையா என்று கேட்டார். நான் சொன்னேன் இல்லை இன்னும் எனக்கு தகவல் தரவில்லை என்றேன்.

அப்போ நான் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவின் நிலையான தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து கூறினேன். கல்விப் பணிப்பாளரோடு பேசினேன் உங்களிடம் இன்றைய பாடசாலை மாணவர்களின் வரவு சம்பந்தமான விபரம் இருக்கிறது பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் என தொலைபேசியில் கதைத் ஒரு பெண்ணிடம் கூறினேன். அவர் அதற்கு சொன்னார் எங்களுக்கு அப்படி ஒரு தகவலும் பணிப்பாளர் தரவில்லை. நீங்கள் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் நான் பணிப்பாளரோடு கதைத்துவிட்டு உங்களுக்கு தகவலை சொல்கிறேன் என்றார்.

மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னர் திட்டமிடல் பிரிவின் நிலையான தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பேசினேன். அப்போது அந்தப் பெண் கூறினார். தான் பணிப்பாளரோடு கதைத்ததாகவும், எல்லா தகவல்களும் வந்து சேரவில்லை என்றும் பணிப்பாளர் கூறியதாக அந்தப் பெண்  பதிலளித்தார்.

மீண்டும் நான் பணிப்பாளருக்கு அழைப்பு எடுத்தபோது அவரது தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு 30 நிமிடத்திற்குப் பின்னர் பல தடவைகள் அழைப்பை எடுத்தேன் றிங் ஆகிறது அவர் பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் அவர்களை இரண்டு தடவைகள் தொடர்புகொண்டேன். அவர் தான் கூட்டத்தில் இருப்பதாக பதிலளித்தார்.

இவர்களோடு உரையாடிய அனைத்தும் குரல் பதிவில் ஆதாரத்தோடு என்னிடம் இருப்பதாக மேலும் தெரிவித்தார்.     

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன