பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு நீதிமன்றம் இந்நிலையில் தற்போது,பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கருவூலத்தில் ’தோஷகானா’ என்னும் பிரிவு உள்ளது. அரசு பதவிகளில் இருப்பவர்கள் பெறும் பரிசுப் பொருட்களைப் பெற்றால் இத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்லும்போது கிடைத்த பரிசுப் பொருட்களை அரசின் கருவூலத்துக்கு ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்ததாக ’தோஷகானா ஊழல் வழக்கு’ அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது அந்நாட்டு அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதில், ஊழல் வழக்கில், இம்ரான் கான் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் மற்றும் அரசு கருவூலப் பொருட்களை பதுக்கிய வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரானார் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கான். 2022-ம் ஆண்டு பிரதான கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ்(பிஎம்எல்-என்) தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றன. மேலும், அந்நாட்டின் ராணுவமும் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால், இம்ரான் கான் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் முற்றிலுமான ஆதரவை இழந்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.