வளர்ந்து வரும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை பாகிஸ்தான் ஏ அணி கைப்பற்றியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று பகல் இரவாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களைப் பெற்றது.
தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப் இசாஹிப்சாதா பர்ஹான் இருவரும் அரைசதம் அடித்தனர்.
பின்னர் சைம் அயூப் 59 ஓட்டங்களையும் சாஹிப்சாதா பர்ஹான் 65 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் உமைர் யூசுப் 35 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தயப் தாஹிர் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டிய அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தயப் தாஹிர் 108 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்களையும் எடுத்தது.
இந்தியா சார்பில் ரியான் பராக் இ ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
353 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணியின்
தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் இஅபிஷேக் ஷர்மா தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். தொடக்க விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இசாய் சுதர்சன் 29 ஓட்டங்களில் வெளியேறினார்.
நிக்கின் ஜோஸ்11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் அபிஷேக் ஷர்மா அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிஷாந்த் சந்து 10 ஊட்டங்கள்இ யாஷ் துல் 39 ஓட்டங்கள் இ ஜுரேல் 9 ஓட்டங்கள் ரியான் பராக் 14 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 40 ஓவர்களில் 224 ஓட்டங்கங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.