கிழக்கு மாகாண பழுகாமம் கலாசார மண்டபத்தில் அப்பகுதி மக்களின் நன்மை கருதி நடமாடும் சேவை (04) நடைபெற்றது.
மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சமூக சேவை திணைக்களத்தினால் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி வழிநடத்தலின் கீழ் இந்க சேவை இடம்பெற்றது
இதன்போது காணி , சமூகசேவை, நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு , விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, 70 வயதைப் பூர்த்தி செய்தோருக்கான கொடுப்பனவு, மருத்துவ முகாம், சுதேச வைத்திய சேவை, உள்ளிட்ட பல சேவைகள் இடம்பெற்றன.
பழுகாமம் – 01, பழுகாமம் 02, விபுலானந்த புரம், மாவேற்குடா, வீரஞ்சேனை, வன்னி நகர் மற்றும் பெரியபோரதீவு, பட்டாபுரம், உள்ளிட்ட பல கிராம சேவையாளர்களைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.
போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, வெல்லாவெளி பிரதே சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.