பணவீக்கம்: 2023 செத்தெம்பரில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஓகத்தின் 4.0 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவு பணச்சுருக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 5.2 சதவீதத்தைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்கும் தொடர்ந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஓகத்தின் 8.7 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 செத்தெம்பரில் 0.88 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு, உணவு வகைகளில் அவதானிக்கப்பட்ட 0.18 சதவீதத்தினதும் உணவல்லா வகையில் பதிவுசெய்யப்பட்ட 0.70 சதவீதத்தினதும் விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 ஓகத்தின் 4.6 சதவீதத்திலிருந்து 2023 செத்தெம்பரில் 1.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230927_inflation_in_september_2023_ccpi_t.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன