நீர்கட்டண அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று(02) வெளியடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக , ஒரு யூனிட் தண்ணீருக்கான பயன்பாட்டுக் கட்டணமும், குடிநீர் கட்டணத்திற்கான மாதாந்த சேவைக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கிறது.

ஒரு அலகுக்கான வீட்டு நீர் கட்டணம் பூஜ்ஜியமாக இருந்தபோதிலும் , ஒரு அலகு 08 ரூபாவாக இருந்த பாவனைக் கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூபா 300 சேவைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் தோட்ட வீடுகளின் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய கட்டணத் திருத்தத்தின் மூலம் உள்நாட்டு நீர்க் கட்டணமும் முதல் 05 அலகுகளுக்கு, அலகு ஒன்றுக்கு 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், தோட்டத்து தண்ணீர் குழாய்கள், அரச பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு அலகுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவதுடன், மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய கட்டண அதிகரிப்புக்கு முன் , கடந்த செப்டம்பர் முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

முழுவிபரங்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு:

http://documents.gov.lk/files/egz/2023/8/2343-28_E.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன