நாளை முதல் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

2023 ஓகஸ்ட்27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023ஓகஸ்ட்27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன