வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலங்களில் பக்தர்களோடு பக்தர்களாக திருடர்களும் நடமாடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாநகர சபை மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது. மாநகர முதல்வர் தனபாலசிங்கம் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனால் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாக் காலத்தில் 550 பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிவில் உடை அணிந்த பொலிஸார் ஆகியோர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.