மேல் மாகாணத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இடைக்கிடையே பெய்து வரும் மழை மற்றும் வெப்பக் காலநிலையினால் டெங்கு குடம்பிகள் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் . வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுற்றாடலை துப்பரவு செய்வதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 52 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அனர்த்த பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 வீதம் மேல் மாகாணத்திலேயே டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். கண்டி, புத்தளம், குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பெருமளவில் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.