கொழும்பில் இருந்து தெனியா நோக்கி சென்ற பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை மரம் முறிந்து விழுந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். 17க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.