திருகோணமலை மாவட்டத்தில் தமில் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுவதில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இதனை சுட்டிக்காட்டியதுடன் தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் இந்த மாவட்டத்தல் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் மொழிக்கு இந்த நிலை.குறிப்பிட்டார்.
இந்தக் குறைபாட்டை நானும் உணர்கின்றேன் என்று தெரிவித்த அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சிறு அடுத்து வரும் கூட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இடமபறாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ,பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் அதிகமான அதிகாரிகளும் தமிழ் மொழி பேசுவோராக உள்ளனர். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் அதிகமான விடயங்கள் சிங்கள மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள – தமிழ் உரைபெயர்ப்பாளர்கள் எவரும் நியமிக்கப் பட்டிருக்கவுமில்லை. இதனால் பல அதிகாரிகள் தமது கருத்துக்களை சரியாக முன்வைப்பதில் இடர்பாடுகளை அனுபவிப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்