தனது தம்பிக்காக சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவருரை தெனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெனியாய பல்லேகம மகா வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை நிலையத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்கள பாடத்திற்கான வினாத்தாளுக்கு விடை எழுதவேண்டிய பரீட்சார்த்திக்கு பதிலாக ,அவரது சகோதரர் ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக பரீட்சை மண்டப பொறுப்பாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக , தெனியாய ஏனசல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞரை பொலிஸார் கைதுசெய்தனர்.
அவர் இன்று (09) மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.