தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேருக்கு டெங்கு

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிர்நாடு முழுவதும் உள்ள மகபேறு மருத்துவமனை வளாகங்களை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதவர்களுக்கு, கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைவுதான். இருப்பினும் கடைசி மூன்று மாதங்களில் பாதிப்பு கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போது 343 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இறந்தவர்களும் பாதிப்பு ஏற்பட்ட உடனே மருத்துவமனை வராமல் இருந்தது தான் காய்ச்சல் ஏற்பட்ட உடனே அனைவரும் மருத்துவமனை வரவேண்டும் ‘ என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன