தமிழகத்தின் நாகையில் இருந்து இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாள் நிறுத்தப்படும். இதனைத்தொடந்து இந்த கப்பல் சேவை மீண்டும் ஜனவரி 2024 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான இந்த பயணிகள் படகு சேவை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 40 ஆண்டுக்கு பின் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.
முதல் நாள் 50 பயணிகள் காங்கேசன் துறைக்கு சென்றனர்.அதே போல் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலில் 30 பயணிகள் வந்தனர்.
மறுநாள் (15ம் திகதி) பயணம் செய்ய 15 பேர் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து இனி வரும் நாட்களில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே கப்பலை இயக்க முடிவு செய்தது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் நாகையில் இருந்து இலங்கைக்கும் இடையிலான இந்த சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் ஜனவரி 2024 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது..