தனியார் துறையினர் வருடாந்தம் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை மரப் பலகைகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடுவதாக அரச மரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பாவனைக்கு ஏற்ற மரப்பலகைகள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டாலும் வெளிநாட்டு மர பலகைகளை பயன்படுத்தி பழகிய கைத்தொழில்துறையினர் நாட்டில் இருப்பதாக அரச மர கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் கலாநிதி நிமல் ருவன் பத்திரன தெரிவித்துள்ளார் .
இறக்குமதி செய்யப்படும் மரப் பலகை தேவையை உள்ளூர் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்ய முடிந்தால் , அவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.