ஜி-77 குழும மற்றும் சீன அரசு தலைவர் மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் கியூபாவிற்கு செல்லவுள்ளார். தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் பணி என்ற தலைப்பில் ஜீ-77 மாநாடும் சீன அரச தலைவர் மாநாடும் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஹவானா நகரில் இடம்பெறும்.
இந்த மாநாடுகளுக்கு இணைவாக இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூப ஜனாதிபதி மிகாயல் டிசெஸ் கனலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு அமைய அபிவிருத்தியடைந்து வரும் 134 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.