சீரற்ற காலநிலை: 5051 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேர் இன்று மாலை (30) வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு 316 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணத்தில் 1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேரும் ,மேல் மாகாணத்தில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 1034 பேரும் ,சப்ரகமுவ மாகாணத்தில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 770 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன