சிறப்பாக செயல்பட்ட 65 அரச நிறுவனங்களுக்கு விருதுகள்

சிறப்பாக செயல்பட்ட 65 அரச நிறுவனங்களுக்கு பொன் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பாராளுமன்ற கோப் குழுவின் அறிக்கைக்கு அமைவாக  2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் உயர் உற்பத்தித் தரத்தை எட்டிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் முன்னிலையில் பரிசளிப்பு விழா இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக, 833 அரச நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான 15 நிறுவனங்களுக்கு பொன் விருதுகளும், 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பீட்டுத் திட்டம் எட்டாவது பாராளுமன்றத்தின் கோப் குழு அறிக்கையின்படி முனn;னடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயற்திறனை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன