சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச   வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்ட  ஊர்வலம்   நேற்று (30) நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில்  இடம்பெற்றுள்ளன;

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது..

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த மற்றொரு கவனயீர்ப்பு போராட்ட  ஊர்வலம்   நேற்று (30) மன்னார் நகரில் உள்ள சதொச மனித புதைகுழி பகுதியில் ஆரம்பமானது.

போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு,  யாழ்ப்பாணம்,திருகோணமலை,அம்பாறை மட்டக்களப்பு ஆகிய 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

முப்படைகளினால் யுத்தத்திற்கு முன்பும் யுத்தத்திற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி   கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட அரசியல்  பிரதி நிதிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில்   ஆரம்பமான போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி அலுவலக வீதியை சென்றடைந்தது.

பின்னர் இவர்கள் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ,மகஜர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலான அருட்தந்தையர்களிடம் கையளித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன