பாராளுமன்றத்தில் இன்று (25) சபாநாயகரின் அறிவிப்புக்கள் கௌரவ பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் தனியார் உறுப்பினர்கள் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதியொன்று கௌரவ சபாநாயகருக்குக் கிடைத்திருப்பதாகப் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செஹான் சேமசிங்ஹ அவர்களால் 2023 மார்ச் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் என்றும் அவர் அறிவித்தார். பிரதி சபாநாயகரினால் அறிவிக்கப்பட்ட சபாநாயகர் அறிவிப்புக்கள் பின்வருமாறு,
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹேஷா விதானகே மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன் மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ ஹரின் பிரனாந்து மற்றும் கௌரவ ஜீவன் தொண்டமான் ஆகியோர் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கனக ஹேரத், கௌரவ எஸ்.எம். சந்திரசேன மற்றும் கௌரவ எம். ராமேஷ்வரன் ஆகியோர் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா வழிவகைகள் பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுராத ஜயரத்ன அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். உதயகுமார் மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலு குமார் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மொஹமட் முஸம்மில் பொது மனுக்கள் பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்ஹ அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினீ குமாரி விஜேரத்ன இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விதுர விக்ரமநாயக மற்றும் கௌரவ நலின் பிரனாந்து ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன ஆகியோர்அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார்.