கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்துக்குள் இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
தென்கொரியாவில் தொழிலுக்காக செல்பவர்களை அந்நாட்டுக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த தீர்மானம் மேற்பொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார்
இதற்கமைவாக கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க கொரிய விமான சேவை நிறுவனம் கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் , இரண்டு மாதங்களுக்குள் கொரியாவுக்கு தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்களை கொரிய விமான சேவை ஊடாக கொரியாவுக்கு நேரடியாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
விமானங்களின் தாமதத்தினால் பணியாளர்களை தொழிலுக்காக ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன. முன்னதாக, கொரிய வேலைகளுக்காக தொழிலாளர்கள் பயணிக்கும் விமானம் மூன்று சந்தர்ப்பங்களில் தாமதமானது. சில சமயங்களில் தொழிலாளர்களை உரிய காலத்திற்குள் அனுப்பிவைக்க முடியாமல் போனது. கொரியாவில், அந்நாட்டு நேரப்படி காலை எட்டு முதல் ஒன்பது மணி வரை எமது தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்திற்கு மேற்பட்டால் தொழிலாளர்களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
நேற்றும், இவர்கள் பல எதிர்பார்ப்புடன் மூட்டை முடிச்சுகளுடன் நம்பிக்கையுடன் விமானிலையத்திற்கு செல்ல தயாராக இருந்தனர். கொரியா செல்ல நேற்று 800வது குழு தயாராக இருந்தது. எண்ணூறாவது குழு பயணத்தின் மிக அருகாமைக்குச்சு சென்று , நல்லாசிகளையும் பெற்று எல்லாவற்றையும் தயார் செய்தாலும், விமானம் தாமதமாகுகிறது.
தற்போதைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தற்காலிகமாக சிங்கப்பூர் வழியாக தொழிலாளர்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கொரியன் விமான சேவை மூலம் கொரியாவுக்குச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இலங்கையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக வந்தாலும், சிங்கப்பூரில் இருந்து கொரியாவுக்கு பல விமான சேவைகள் இருப்பதால் அதை முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.