சிறையிலுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
குறித்த கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிப்பட்டதாகவும், அந்தக்கடிதம் கிடைத்ததும் பின்னர் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதன் பின்னர் சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படும் அல்லது புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி தகுதியற்ற உற்பத்தியாளரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி கொள்முதல் மோசடி குறித்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல பெப்ரவரி 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.