யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளன.இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று (16) ஊடகங்களுக்கு இதனை தெரிவித்த அவர்,
நயினாதீவு திருவிழாவிற்கு இம்முறை மேலதிகமாக 21 படகுகள் தொடர்பில் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. 19 படகுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்துள்ளது. இரு படகுகள் திருத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.