உயர்கல்வி அமைச்சினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களின் நலன் கருதி மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கான இரண்டு விடுதிகள் பல்கலைக்கழக உப வேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் நேற்று (07) திறக்கப்பட்டது.
இதற்காக 80 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடங்களுக்கான நிர்மாண பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் ,நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக இதன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..