இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது.
2023 மே 26 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 மே26 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் மேல் ,சப்ரகமுவ ,மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு கரையோரப்பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.