கிழக்கில் உற்பத்தியாளர்களுக்கு 350 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள்

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 350 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள  தெரிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன