காலிமுகத்திடலில் சிற்றுண்டி விற்பனையை ஒழுங்குபடுத்த கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளது.
மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் சுத்தம் தொடர்பில் அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரம் காலிமுகத்திடலில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன மேலும் தெரிவித்தார்.