கல்முனைப் பிராந்தியத்தில் ‘டெங்கு’ தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலை

கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுவதாக கள ஆய்வு ஆய்வுஅறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக விசேட பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டுள்ளது.

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ சீ.எம் பசால் அவர்களினால் டெங்கு உணர்குறிகள் மற்றும் வெற்றிகரமான சிகிச்சை தொடர்பில் இந்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ அப்துல் வாஜித் ‘டெங்கு நோயை முன்னரை விட அதிகம் எதிர்த்து போராட வேண்டியத அவசியம் இருப்பதாக சுட்டிக்காட்டினார.

தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எஸ் எம் பௌசாத், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஏ எம் ஹில்மி ஆகியோர் இந்நிழ்வில் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன