பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தளிதலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க, 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை கனடாவிலுள்ள வன்குவர் என்ற இடத்தில் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டிற்கான முழுநிறைவு கூட்டத்தொடரிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி மன்றத்திலும் கலந்துகொண்டு இலங்கையின் பேராளர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, நேபாளம் மற்றும் புருணை ஆகிய நாடுகளின் உரிய பரஸ்பர மதிப்பீடுகளில் பங்கேற்கின்ற நிபுணத்துவ மதிப்பீட்டாளர்களை இலங்கை பேராளர் குழு உள்ளடக்கியிருந்தது. பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதங்களுடன் தொடர்புபட்டு ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தல் உள்ளடங்கலாக கடுமையான நிதியியல் குற்றங்களை முறியடிப்பது தொடர்பான பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கு 42 ஆசிய பசுபிக் குழுமத்தின் உறுப்பினர் நாடுகள், அவதானிப்பு நிறுவனங்கள், நியாயாதிக்கங்கள் மற்றும் தனியார் துறை பங்குதாரர்களைச் சேர்ந்த 300இற்கு மேற்பட்ட பேராளர்களை ஆண்டுமுழுநிறைவு கூட்டத்தொடர் ஒன்றுசேர்த்தது.
2023ஆண்டிற்கான ஆசிய பசுபிக் குழுமத்திற்கு கனடாவின் நிதித் திணைக்களத்திலிருந்து இணை உதவி பிரதி நிதி அமைச்சர் திரு. ஜுலியன் பிராசியோ மற்றும் அவுஸ்திரேலியாவின் அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸின் பிரதி ஆணையாளர் இயன் மெக்கார்ட்னி ஆகியோர் இருவரும் இணை தலைமை வகித்தனர்.
முழுநிறைவு கூட்டத்தொடரில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் திமோர் லெஸ்டி மற்றும் லாவோ மக்கள் சனநாயகக் குடியரசின் நிதியியல் உளவறிதல் பிரிவுகளுக்குமிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாதிடப்பட்டன. தொடர்புடைய அதிகார எல்லைகளுக்கிடையிலான பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலில் பன்னாட்டு ஒத்துழைப்பையும் கூட்டிணைப்பதையும் அதிகரிப்பதற்கு இவ்விரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உதவும். சட்டவிரோத நிதியியல் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் பன்னாட்டு உறவுகளை வலுப்படுவத்துவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டி, ஆளுநர் வீரசிங்க இப்பங்குடமைகளை வசதிப்படுத்தி தலைமைத்துவத்தை வழங்கினார்.