வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு கதிர்காம் பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் ஜூலை 04ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனமல்வில வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர்தர பாடசாலை, தெடகமுவ உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு இம்மாதம் 19ஆம் திகதி முதல் , ஜூலை 4ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் தீர்த்தோற்சவத்தையடுத்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.