கச்சத்தீவு இன்றைக்கும் இந்தியாவுக்குத்தான் சொந்தம்

கச்சத்தீவு இன்றைக்கும் இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று இந்திய நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
தில்லியில் நேற்று (10) ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்திய நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக முறைப்படி சட்டம் இயற்றி கொடுக்கப்படவில்லை என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. குறிப்பிட்டதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் நிலத்தை எப்போதோ கையகப்படுத்தி கொடுத்துவிட்டோம். இந்திய அரசு பொய் சொல்கிறது. ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? தமிழன் என்றால் ஏமாந்தவனா? தமிழ்நாட்டு மக்கள் இதற்கு 2024 தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பார்கள்.தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போவார்கள். இதனால் நிச்சயமாக அவை திரும்பப் பெறப்படும். இல்லாவிட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறுவோம் என்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மெலும் தெரிவித்தார்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன