இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு- தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 ஜூலை 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 ஜூலை 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர்வரையான வேகத்தில் ஓரளவுபலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.